கோவைப் புதூர் பகுதியில் பள்ளி வாகனத்தை மது போதையில் ஓட்டி வந்தவர் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் மீதே படுத்து உறங்கினார்.
சி.எஸ் அகாடமி பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரின் பெற்றோர், தாங்களே ஒன்றிணைந்து ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.
அந்த ஒப்பந்த வாகனத்தை மது போதையில் ஓட்டி வந்த செந்தில் என்ற நபர் போதை தலைக்கேறி, நடுவழியில் நிறுத்திவிட்டு ஸ்டியரிங் மீதே படுத்து உறங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த வாகனத்தில் 12 குழந்தைகள் பயணித்துள்ளனர். அப்பகுதியில் இருந்தவர்கள் குழந்தைகளை வேறொரு வாகனத்தில் அனுப்பி வைத்துவிட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், வாகனத்தைப் பறிமுதல் செய்து செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.