ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே இரு சக்கர வாகனம் ஆம்னி வேன் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சாயல்குடி அருகே உள்ள சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இசேந்திரன் அன்பரசன், லிங்கேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மேலசெல்வனூர் ஊரில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண சென்றுள்ளனர்.
அப்போது சாத்தங்குடி விலக்கு என்னும் இடத்தில் இருசக்கர வாகனம் பலத்த வேகத்தில் எதிரே வந்த ஆம்னி வேன் மீது மோதியுள்ளது. மோதிய இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் இசேந்திரன், அன்பரசன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.லிங்கேஸ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் உயிரிழந்தார்.ஆம்னி வேன் ஓட்டுநர் பாலமுருகன் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.