விருநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். மடவார்வளாகம் பகுதியில் தொடங்கி தெற்கு ரத வீதிவழியாக வந்து போது, பள்ளி சிறுவர் சிறுமியர்கள் சிலம்பாட்டம் அடி காண்பித்தனர்.
ஆண்டாள் கோயில் சன்னதி பகுதியில் சென்ற போது, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற அண்ணாமலை கண்கள் கட்டப்பட்டு உறியை அடித்தார்.
பின்னர் ஆண்டாள் கோவில் சார்பில் கிளி பரிவட்டம் அண்ணாமலைக்கு கட்டப்பட்டது. பின்னர் பேருந்து நிலையம் வழியாக சின்ன கடை பஜார் வழியாக சென்று ராமகிருஷ்ணாபுரத்தில் நிறைவு செய்தார்.