ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணமும், அரசு அதிகாரிகளின் சுமார் ஓராண்டு கால உழைப்பும் மிச்சப்படும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பல நாடுகளில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை நடைமுறையில் இருப்பதாகவும், இத்திட்டம் மூலம் இந்தியாவின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.