அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த மருத்துவக் கழிவுகளை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் சுத்தம் செய்யச் சொன்னதாக இருளர் பழங்குடி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைக்காகச் சென்ற அவர்களை, கட்டாயப்படுத்தி மருத்துவக் கழிவுகளை அகற்றச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
துர்நாற்றம் வீசும் மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பு உபகரணங்களின்றி அகற்றுவதால் நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று கூறும் அவர்கள், கழிவுகளை அகற்ற மறுத்தால் வேலை இல்லை என்று மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.