செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு சுங்கச் சாவடியில் அமர்ந்து போராட்டம் நடத்திய அவர்கள், 2019-ஆம் ஆண்டிலேயே காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.
சிறிது நேரம் போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய விதிமுறைக்கு மாறாகச் செயல்படும் சுங்கச்சாவடிகளை நீக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதில் பரனூர் சுங்கச்சாவடியும் ஒன்று என்று கூறப்படுகிறது. தொழுப்பேடு சுங்கச்சாவடியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.