திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, மலை சூழ்ந்த பகுதியான மாலைப்பட்டியில், குடிநீருக்காக பல கிலோ மீட்டர் அலைய வேண்டி உள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாட்டால், 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று, 15 ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் எடுத்துவரும் சூழல் உள்ளதாக, பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தங்களின் ஊராட்சியான கணவாய்ப்பட்டியில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, குறைவான நேரத்திற்கு குடிநீர் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர்கள், பிரச்னையைத் தீர்க்க ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.