ராசிபுரத்தில் 854 கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வரும் 4ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டுகிறார்.
கோனேரிப்பட்டி பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கான பணி நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு திமுக எம்.பி., ராஜேஷ் குமார் செய்தியாளரை சந்தித்தார்.
நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், ராசிபுரம் நகராட்சி மற்றும் வெண்ணந்தூர், புதுப்பட்டி, பட்டணம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட 8 பேரூராட்சிகள், 4 ஊராட்சிகள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள் என்றார்.
கடந்த 40 ஆண்டுகளில், ராசிபுரத்தில் அமையவுள்ள மிகப்பெரிய கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆயிரத்து 325 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட உள்ளதாகவும் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் திட்டம் முழுமையாக முடிவு பெறும் எனவும் அவர் கூறினார்.