திருப்பூரில், மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் ஊழியரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலர், அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவிநாசியைச் சேர்ந்த சத்யஸ்ரீ வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தார்.
இன்று காலை பணிக்கு வந்த அவரிடம், அவரது காதலர் நரேந்திரன் வந்து பேசியுள்ளார்.
அப்போது திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்துவிட்டு, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே சத்யஸ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.