சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளப் பாதிப்பு இருக்காது என்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையில், மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை அவர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி, தாமிரபரணி ஆற்றை ஒட்டிய 5 மாவட்டங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை உள்ளதாகவும், அது குறித்து ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.