சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், போதிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணத்தை மட்டும் ஏன் உயர்த்த வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 63 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் 3 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.