சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில், அதிகாரிகளை கண்டித்து, நோட்டீஸ் விநியோகித்து, போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற விவசாயிகளை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் அதிகாரிகள் துணையோடு, உழவர் உற்பத்தியாளர் மையம் என்ற பெயரில் வியாபாரிகள் கொண்டுவரும் காய்கறிகள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிப்பதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு வரும் காய்கறிகளை, விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும், அப்படியே அனுமதித்தால் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், துண்டு பிரசுரம் விநியோகித்த காரணத்திற்காக 6 விவசாயிகள் ஒரு மாதத்திற்கு கடை அமைக்க தடை விதிப்பதாக, தாதகாபட்டி உழவர் சந்தை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.. உழவர் சந்தை அதிகாரிகளின் செயல் விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.