நாகர்கோவிலில், நடுவழியில் பழுதான அரசுப் பேருந்தை மாணவிகள் தள்ளிவிட்ட வீடியோ வெளியான நிலையில் ஓட்டுநர் உள்பட 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மணக்குடிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து கேப் ரோட்டில் பழுதாகி நின்றது.
பேருந்திலிருந்த கல்லூரி மாணவிகள் கீழே இறங்கி அந்த பேருந்தை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ய வைத்தனர்.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பேருந்தை முறையாக பராமரிக்காத எலக்ட்ரீசியன், மேற்பார்வையாளர் மீது போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.