காரைக்குடி படையப்பா உணவகத்தில், ஏற்கனவே சமைத்த அசைவ உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்திருந்து விற்பனை செய்து வந்ததாக கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சாக்கடை அருகே திறந்த வெளியில் சமையல் செய்யப்படுவதை கண்டறிந்த அதிகாரிகள் அதனை சரி செய்ய 5 நாட்கள் கால அவகாசம் வழங்கி உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர்.
வியாழக்கிழமை சந்தை எதிரில் உள்ள அந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு, ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சிக்கன், நண்டு கிரேவி, மற்றும் நறுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், சாதம் ஆகியவை கெட்டுப் போயிருந்ததால் அதனை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.