6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுவரையில் மாவட்ட அளவில் ஆசிரியர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் பயிற்சி நிறுவனம் தயாரித்த வினாத்தாள்களைக் கொண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்த வினாத்தாள்களைக் கொண்டு தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.