கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை உரிய நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றுத் தரவில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றம் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக காட்பாடி அடுத்துள்ள பொன்னை கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோயிலை புதுப்பிக்கும் பணிக்கு துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.