கன்னியாகுமரி மாவட்டம் இலவுவிளையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஆடிப்பாடி பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
இலவுவிளை சந்திப்பிலிருந்து கல்லூரி வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் மாவேலி மன்னன் வேடமணிந்து வந்ததுடன், பல்வேறு வகையான கலாச்சாரங்களை சித்தரிக்கும் தெய்யம் விளக்கு கட்டு செண்டை மேளம் சிங்காரி மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.
அத்தப்பூ கோலப்போட்டி வடமிழுக்கும் போட்டி நடனம் உறியடி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஓணம் விழாவில் மாணவ மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
வரும் 29-ஆம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.