திருப்பூர் மாவட்டம் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கியதில் எலும்புகள் முறிந்து, செவித்திறன் 90 சதவீதம் பாதிக்கப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி ஜோஸ்லின் ஜெனியா தனது சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 5ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி கழிவறைக்கு சென்றபோது கூரையில் இருந்து அறுந்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒயர் பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முழங்கை மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என சிறுமியின் தாய் ஜெனிபர் வேதனை தெரிவித்துள்ளார்.