தனுஷ்கோடி மற்றும் இலங்கை கடற்பரப்பில் கஞ்சா பொட்டலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்குவது குறித்து, மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு மிக அருகே தனுஷ்கோடி இருப்பதால் தமிழகத்திலிருந்து கடல் வழியாக கஞ்சா, சமையல் மஞ்சள், பீடி இலைகள், கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கீழக்கரை, வேதாளை உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்கம் கடத்திவரப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் 50 கிலோ மற்றும் 40 கிலோ கஞ்சா மூட்டைகள் கலங்கரை விளக்கம் பகுதியில் கைப்பற்றப்பட்டன. நேற்றும் இதுபோல் கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியது குறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதேபோல் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் சுமார் 82 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்பகுதியிலும் கரை ஒதுங்கும் கஞ்சா பொதிகள் - விசாரணை
கஞ்சா பொதிகள் பற்றி மத்திய, மாநில உளவுத்துறை தீவிர விசாரணை