திருச்செந்தூர் அருகே வயதான தாயை கவனிக்காத மகனை 3 மாதங்கள் சிறையில் அடைக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
72 வயதான மாலையம்மாள், மூத்த மகன் முத்துக்குமார் தன் பெயரிலிருந்த வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை கவனிக்கவில்லை என ஒன்றரை ஆண்டுக்கு முன் புகாரளித்தார்.
அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, மாலையம்மாளுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்குமாறு முத்துகுமாருக்கு உத்தரவிட்டார்.
முத்துக்குமார் பணம் கொடுக்கத் தவறியதாக தூத்துக்குடி ஆட்சியரிடம் மாலையம்மாள் புகார் மனு அளித்தார்.
ஆட்சியரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குரு சந்திரன் முத்துக்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்தார்.
இதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.