கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே ஜம்பை ஆற்றில் நள்ளிரவில் மணல் அள்ள வந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதி இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அரசு சார்பில் வெட்டப்படும் குளத்துக்கு மணல் அள்ளிச் செல்லவுள்ளதாக லாரியில் சென்றவர்கள் தெரிவித்த நிலையில், அரசு வேலைக்கு மணல் எடுக்க ஏன் இரவில் வர வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
தகவலறிந்து வந்த போலீசார், லாரிகளை திருப்பி அனுப்பியதுடன், பொதுமக்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் இதுவரை மணலூர்பேட்டை போலீசார் லாரிகளை பறிமுதல் செய்யாமல், அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.