செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீட் விலக்குக் கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. உண்ணாவிரதம்.. மதுரை தவிர தமிழ்நாட்டின் 39 இடங்களில் உண்ணாவிரதம்.. !!

Aug 21, 2023 06:56:48 AM

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி இணைந்து மதுரை தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். முதலில், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா முதல் ஜெகதீஷ்வரன் வரையிலான மாணவ, மாணவிகளின் நிழற்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

அப்போது நீட் தேர்வால் இறந்த மாணவ, மாணவிகள் பற்றிய வீடியோ ஒன்று திரை வைத்து ஒளிபரப்பட்டது. அதைப் பார்த்து உதயநிதி உள்ளிட்டோர் கண்கலங்கினர்.

திருமணம் முடிந்த கையோடு மணமாலையை கழுத்தில் அணிந்தபடி புதுமண ஜோடிகள் உண்ணாவிரத மேடைக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்த அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, உதயநிதிக்கு ஸ்டெத்தஸ்கோப் வழங்கினார்.

உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றி உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் அது தான் என்றும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உதயநிதி ஸ்டாலினுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement