சேலம் அம்மாப்பேட்டையில் குறுகலாக தெரு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை இன்னோவா கார் மூலம் முட்டி விட்டு, அதன் ஓட்டுநரை தி.மு.க. பிரமுகர் ஒருவர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
அம்மாபேட்டை குலசேகர ஆழ்வார் தெரு பகுதியில் உள்ள தமது வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை வழக்கம் போல நிறுத்தி விட்டு கண்ணன் என்பவர், வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு கட்சிக் கொடி கட்டப்பட்ட காரில் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ராஜா வந்ததாக சொல்லப்படுகிறது. குறுகலான சாலை என்பதால் கார் செல்ல வழியில்லாமல் இரு சக்கர வாகனம் மீது முட்டியது.
உடனேகண்ணன் வீட்டில் இருந்து வெளியே வந்து தனது இரு சக்கர வானத்தை சற்று நகர்த்தி ராஜாவின் இன்னோவா செல்வதற்கு இடம் விட்டதுடன், தலையிலும் அடித்துக் கொண்டார்.
இதை காரின் ரியர் வியூ கண்ணாடி வழியாக பார்த்ததாக கூறப்படும் ராஜா, காரில் இருந்து இறங்கி வந்து கண்ணனின் கன்னத்தில் அறைந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.