மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட 10 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என கூறியுள்ளார்.
முன்னதாக, மாநாட்டில் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
மீன் பிடி தொழில் குறித்த சிறப்பு கண்காட்சி அரங்குகளையும், சுய உதவிக்குழுக்கள் தயாரித்த கடல் சார் மதிப்புக் கூட்டுப் பொருட்களையும் அவர் பார்வையிட்டார்.