திருப்பூரில் ஜூஸ் கடையில் வாடிக்கையாளருக்கும், ஊழியருக்கும் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிடிசி கார்னர் பகுதியில் உள்ள இஸ்மாயில் என்பவரின் கடைக்கு இரண்டு இளைஞர்கள் வந்து ஜூஸ் கேட்டுள்ளனர்.
அவர்கள் கேட்ட ஜூஸை தயாரிக்க சிறிது நேரம் ஆனதால் இளைஞர்கள் காத்திருந்த நிலையில், இன்னும் நேரம் ஆகும் என கடை ஊழியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவர்கள் தகாத வார்த்தைகள் பேசியதால் கைகலப்பு ஏற்பட்டு, கடையில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.