தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரை நடைபயணத்தில் கட்சியினர் வீசிச் சென்ற குப்பைகளை பாஜகவினரே அப்புறப்படுத்தினர்.
வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் நகர் பகுதிகளில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்தார்.
அப்போது பாதயாத்திரையில் முன் சென்ற பாஜகவினர் வீசிச் சென்ற தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை பின்னால் வந்த பாஜக தொண்டர்களே அப்புறப்படுத்தி வாகனத்தில் சேகரித்து தூய்மைப்படுத்தினர்.
இதற்கிடையில் திருச்செந்தூரில் நடைபெற்ற நடைபயணத்தின் போது சாலையோர டீக்கடையில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் போட்டு கொடுத்த தேனீரை அண்ணாமலை ருசித்து குடித்து பாராட்டினார்.