புத்தகங்களை எந்த அளவிற்கு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு அறிவு வளரும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
புதிய வண்ணாரப்பேட்டை தங்கம் மாளிகையில் நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நாம் புத்தகங்களை படிப்பதன் மூலம் பல நூல்களை படைப்பதற்கு நூல் ஆசிரியர்களுக்கு உற்சாகம் பிறக்கும் என்றார்.