ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் அனுமதி தராதது போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
பல்கலைக் கழகங்களைச் சிதைக்கும் வகையிலும், உயர்கல்வித் துறையைக் குழப்பும் நோக்கிலும் ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பின்றி பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் தேனீர் விருந்தை புறக்கப்பணித்தாக அறிவித்துள்ளன.
புதுச்சேரியிலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.