சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ரயில் நிலையங்களை சுற்றி கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மோப்ப நாய்கள், வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொன்ராம் குறிப்பிட்டார்.