சிவகாசியில் தமிழக அரசு சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் பொங்க நடனமாடினர்.
இந்நிகழ்வில் ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் பங்கேற்று, போதைப்பொருள் தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.