நாட்டின் 76வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை காமராஜர் சாலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
சுதந்திர தின விழாவுக்கு வரும் முதலமைச்சரை காவல்துறை அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்றும் கமாண்டோ படை, குதிரைப்படை உட்பட 7 படைபிரிவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, முதலமைச்சர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவது போன்றும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் வழங்குவது போன்றும் ஒத்திகை செய்யப்பட்டது.