புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்குவது மன வேதனை அளிப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில், பனை தேசியத் திருவிழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, வெளி மாநில விவகாரங்களில் கவலை தெரிவிக்கும் தமிழ்நாடு அரசு நமது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.
மேலும், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், ஒரே கூட்டணியில் இருந்தும் கர்நாடக அரசின் ஒப்புதலை தமிழக அரசால் பெற முடியவில்லை எனத் தமிழிசை விமர்சித்தார்.