மதுரையில் அதிமுக பொன்விழா மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் 20ம் தேதி வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டினை ஒட்டி 60 ஆயிரம் சதுர அடியில் மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மழை மற்றும் வெயிலினால் பாதிப்பு ஏற்படாமலும், ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் மாநாட்டிற்காக தகர கொட்டகை அமைக்கும் பணிமுடிவு முடிவு பெற்றுள்ளது.
சுற்றிலும் அடைக்கப்பட்டு அதில் அதிமுக விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிமுக வரலாற்று புகைப்படக் கண்காட்சிக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக 500 கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துமளவிற்கு 300 ஏக்கரில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் 7 முதல் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் வகையில் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மாநாட்டுப் பொறுப்பாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்