திமுக தொண்டனுக்காகவே தாம் வாழ்வதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நா தழுதழுக்கத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற திமுக வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில், தொண்டர்கள் அனைவரும் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.