தேசிய மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் நடைபெறும் யுத்தம்தான் நாடாளுமன்ற தேர்தல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகாசி நடைபயணத்தின் போது உரையாற்றிய அவர் பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை இந்த ஆண்டு மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதி அளித்தார்.
மோடி இருப்பதால் மட்டுமே பட்டாசு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் மோடி இல்லை என்றால் சீன பட்டாசு புகுந்திருக்கும் என்றும் தெரிவித்தார். தற்போதுபட்டாசு தொழிலுக்கு என்.ஜி.ஒ மூலமாகவே சிக்கல் ஏற்படுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.