இந்தியாவிலேயே முதன் முறையாக, பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க், சென்னை புழல் அருகே திறக்கப்பட்டுள்ளது.
புழல்-அம்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
இதில் 30 பெண் கைதிகள் பணிபுரிவர். அவர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அது விரைவில், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.