செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கரூரில் புதிதாக கட்டி வரும் பங்களா குறித்த விபரங்கள் கேட்டு அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கஸ்டடி எடுத்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் புறவழிச் சாலையில் அசோக்குமார் கட்டி வரும் பங்களாவில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
3.75 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் பங்களா அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் சென்றனர்.
அங்கு அவர் இல்லாததால், அவருடைய வீட்டில், விசாரணைக்கு ஆஜராகும் சம்மனை அமலாக்க துறையினர் ஒட்டிச் சென்றனர்.
அனுராதா என்பவர் பெயரில் இருந்த அந்த இடம் எப்படி நிர்மலாவின் தாயார் லட்சுமியின் பெயருக்கு மாறியது என்ற விபரங்களையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.