விழுப்புரம் மாவட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தை தொடர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் தடுப்பணையில் இருந்து கால்வாய் அமைத்து 36 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நந்தன் கால்வாய் திட்டம் துவங்கப்பட்டது.
சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் இத்திட்டத்திற்கு அரசு இரண்டு முறை நிதி ஒதுக்கீடு செய்தும் பணி பாதியோடு நிறுத்தப்பட்டது.
இத்திட்டம் முழுமை பெற்றால் விழுப்புரத்தில் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனைமலை ஏரிக்கு தண்ணீர் கிடைக்கும் எனவும் இதனால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நேரடியாக பாசன வசதி பெறுதோடு புதுச்சேரி மாநிலம் வரையில் பயன்பெறும் என கூறப்படுகிறது.
எனவே, மீதமுள்ள 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும் விரைந்து கால்வாய் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.