மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்லாததால், பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு சென்று விளைநிலங்களுக்கு ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அணையில் இருந்து குறைந்தளவே நீர் திறக்கப்படுவதால், கடைமடை மாவட்டமான திருவாரூரில் போதியளவு தண்ணீரின்றி 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.
சோழிங்கநல்லூர் கிராமத்தில் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு சென்று விளைநிலத்திற்கு ஊற்றிய பெண் விவசாயி ஒருவர், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக கூறினார்.
இயந்திரம் வைத்து தண்ணீர் பாய்ச்சினாலும் ஒரே வாரத்தில் பயிர்கள் காய்ந்து விடுவதால், கூடுதல் நீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.