செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதன் மூலம், மர்மதேசம் போல இருந்த மர்மங்கள் வெளிவரும் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம் ஆகப் போகிறது என்றும், முதல்வருக்கு இனிவரும் காலம் தூக்கமில்லாத இரவாகதான் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி நிர்வாக திருத்த மசோதா விவகாரத்தில், அதிமுகவை கொத்தடிமை என முதலமைச்சர் விமர்சித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், திமுக தான் கொத்தடிமையாக இருப்பதாக கூறினார்.