முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு கூடுதலாக இரண்டு துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாணவர்களுக்கு காலை 8.15 முதல் 8.50 மணிக்குள் உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்குவது மற்றும் பொருட்களின் இருப்பை கண்காணிக்க, தணிக்கை செய்ய 2 துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு இடையே உரிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், கண்காணிப்பு குழு கூட்டங்கள் நடத்துதல் போன்ற பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.