ராசிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்குவாகனம் மோதிய விபத்தில், கால்துண்டித்த நிலையில் உயிருக்குப் போராடிய கூலித் தொழிலாளி ராஜேந்திரனை அவ்வழியாக வந்த திமுகவைச் சேர்ந்த பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவர் நல்லதம்பி தமது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.விபத்தில் காயம் அடைந்த ராஜேந்திரன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.