தேசிய ஜனநாயக கூட்டணியை பாதிக்கும் வகையில் அ.தி.மு.க. தலைவர்கள் உட்பட யாரும் பேசாமல் இருப்பது நல்லது என பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை ஹைவேஸ் காலனியில் நடைபெற்ற அங்கன்வாடி கட்டடத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்துக்கு பதிலளித்த அவர், அண்ணாமலைக்கு கொடுக்கும் மரியாதை, தனிநபருக்கு கொடுக்கும் மரியாதை அல்ல; அது பா.ஜ.க. என்ற கட்சிக்கு கொடுக்கும் மரியாதை என்றார்.