மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்காக காவிரி டெல்டாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விளை நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெய்வேலி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க.வினரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, டெல்டாகாரன் என்று கூறிக் கொண்டு, காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் வழங்க அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.