தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
இது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியல் புரிதல் இல்லாமல் இத்தகைய கருத்துகளைக் கூறக் கூடாது என்றும் சிறுபான்மையினர் இருப்பதால் தான் இந்திய அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.