சென்னையில் வாடிக்கையாளர் பெயரில் கிரெடிட் கார்டை வாங்கி, மோசடி செய்ததாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பெயரில் கடன் அட்டையைப் பெற்று, அதன்மூலமாக அமேசான் இணையதளத்தில், 7 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு, யாரோ பொருட்களை வாங்கியிருப்பதாக கவுதமி என்பவர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அதில், தனது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில், தனது மொபைல் எண், இ-மெயில் முகவரியும் மாற்றப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.
அதன்பேரில் விசாரித்த மத்திய குற்றப்பிரிவுப் போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக, அந்த வங்கியின் முன்னாள் ஊழியரான சைதாப்பேட்டையைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.