தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே டி.எம்.கே. ஃபைல்ஸ் ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
என் மண், என் மக்கள் யாத்திரையின் 6-வது நாளில் லெம்பலக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் தான் ஆளுநரிடம் பட்டியல் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு பெண்கள் முளைப்பாரி ஏந்தி வரவேற்பு அளித்தனர். கட்சி தொண்டர்கள் அண்ணாமைலையின் கைகளை குலுக்கி ஆதரவு தெரிவித்தனர்.