ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்த இந்திய ஹாக்கிக் குழுவினருக்கு விமான நிலையத்தில், மயிலாட்டம், கரகாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மறுநாள் முதல் 12ஆம் தேதி வரை மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.