காகித தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் காகித உற்பத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய மாநில அரசுகள் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
75ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேசாயி காகித ஆலையின் நிர்வாக இயக்குனர் காசி விசுவநாதன், காடுகளை அழித்துத்தான் காகிதங்கள் தயாரிக்கப் படுகிறது என்பது தவறான தகவல் என்றும் காகிதங்கள் 71சதவீதம் காகித கழிவுகளை மறுசுழற்சி செய்தும் மீதமுள்ளவை விவசாயிகளிடமிருந்து பெறும் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.