இந்திய-இலங்கை மீனவர்கள் விவகாரம், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் நிலை குறித்து பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆலோசித்து உள்ளதாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஒரு வார பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஜீவன் தொண்டமான் டாலர், யூரோ போன்று இந்திய ரூபாயை இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்திய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையான UPI இலங்கையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெறிவித்தார்.
மேலும் பொருளாதார நெருக்கடியின் போது தான் தங்களின் உண்மையான நண்பனை தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.